Tuesday, December 31, 2013

காதலிக்க செல்வோர் இவ்வழியாக செல்லவும்...

இமை விரிந்து,
விழி  நோக்க ,
மின்னல் பரவி,
கண்கள் பேச,
அனுமதி கொடுத்து,
விரல்கள் மோத,
கைகள் இடித்து,
சேர்ந்து நடந்து,
பேசி கலைத்து,
கலைந்து சென்று,
திரும்ப பேச,
குறுஞ்செய்தி அனுப்பி,
கைபேசியில் உரையாடி,
ஊர் சுற்றி,
உணவு உண்டு,
பீச்சில் அமர்ந்து,
கூந்தல்கள் கோதி,
கை பிசைந்து,
எச்சில் விழுங்கி,
கட்டி அனைத்து,
வாசனை முகர்ந்து,
மின்சாரம் பாய,
முத்தம் தொடுத்து,
உடல் எரியும்,
வெப்பம் தணிக்க,
அச்சம் விட்டு,
அறை எடுத்து,
உடல்கள் இழைத்து,
சுவாசம் அற்று,
தவத்தில் கிடக்கும்,
காமம் சுவைக்க,
காதலின் பெயர்,
வேண்டும் என்றால்,
இக்காதல் செய்வோம்.

..................அருள்

Monday, December 23, 2013

பால்யத்தின் மார்கழி மாதம் !!

வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் எங்கு ,எங்கு ஓடிக்கொண்டு இருந்தாலும் மார்கழி மாதம் என்று கேட்டுவிட்டால் , மனதின் ஓரம் சில்லேன்று நினைவுகள் வந்து தாலாட்டும்,என் கிராமம் இன்னும் ஈர பசையாய் ,என் மனதில் படிந்து இருபதற்கு இதுவும் அழகிய காரணம் .

என்னை பொருத்தவரை மார்கழிமாத ஒரே பிரச்சனை குளிர்தான் , மற்றபடி அந்த மதங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்து இருகின்றது , மார்கழி மாதம் தொடங்கிவிட்டதை எனக்கு வருட ,வருடங்கள் ,விடியற்காலையில் எங்கள் ஊர் கோயிலில் சாமி பாடல்கள் போடுவார்கள்,
4 -மணிக்கே ஒலிபெருக்கி  பாட துவங்கிவிடும் , தூக்க கலக்கத்தில் முதலில் கேட்டுவிட்டு பின்பு காலையில் வீட்டில் பேசும்பொழுது மார்கழி மாதம் வந்துவிட்டதை தெரிந்து கொள்வேன்.

எங்கள் ஊர் கோயிலின் ஒலிபெருக்கியை அந்த ஒரு மாதம் முழுவதும் என் அப்பாதான் செலவு செய்து கட்டுவார், அந்த ஒரே உரிமையை பயன்படுத்தி ரேடியோகாரரிடம் நட்பை பெற்று , சாயந்தர நேரங்களில் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்று எங்களுக்கு பிடித்த பாட்டை போடவோம் , எந்த பெருசுக்காவது ஒலிச்சித்திரம் தேவைபட்டால் நாங்கள் உதவி செய்து , பெருசுகளிடம் தென்னாவாட்டாய் நடந்து கொள்வோம் !

மார்கழி மாதம் தொடங்கி ஒரு வாரத்திற்கு , கோளங்களின் போட்டி ஆரம்பிக்காது , மெல்ல ,மெல்ல ஒரு ,ஒரு வீடாக கோலங்களில் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி சூடு பிடிக்கும், எனக்கு தெரிந்து என் அக்காவிடம் சண்டை போடாமல் சமாதானமாக செல்வது இந்த ஒரு விஷயங்களில் மட்டும்தான் , கோலம் போடுவது பெண்களின் வேலை என்பதால் ,எங்கே என்னை சேர்த்து கொள்ளாமல் போய்விடுமோ என்கின்ற பயம் !!

இந்த ஒரு மாதம் முழுவதும் , கிராமத்தின் வீதிகளில் கோலமாவு வண்டிகாரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் ! கோலமாவு...கோலமாவு..கலர் கோலமாவு ..என்று அழகிய சுருதியில் ..கூவி கூவி விற்பார்கள், பணம் மட்டும்மே கொடுத்து வாங்க மாட்டார்கள் , துருபிடித்த இரும்பு சாமான்கள் , பழய அலுமினிய பாத்திரங்கள் ,புளியம் கொட்டைகள் , அதற்க்கு தகுந்ததுபோல் கோலமாவு கொடுப்பார்கள்.

நான் எந்த தெருவில் கலர் கோலமாவு விற்றாலும் ,.கோலமாவுகாரை கூபிட்டு கொண்டு விட்டுக்கு வந்து விடுவேன் , நானும் , என் அக்காவும் சேர்ந்து எங்களுக்கு பிடித்த எல்லா கலர் கோலமாவையும் வாங்குவோம், ஒவ்வொரு கலர் மாவாக பிரித்து வைத்து கொண்டு , அதை வெள்ளை கோலமாவில் சேர்த்து கலர் கோலமாவு தயாரிப்போம், ( நான் இந்த வேலைகளை இவ்வளவு முனைப்புடன் செய்வதற்கும் காரணம் இருகின்றது , எப்போழுதும் படி ,படி என்று அடித்து கொண்டிருக்கும் என் அப்பா ,இபொழுது மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார் ).

எனக்கு தெரிந்து ,எங்கள் ஊரின் மார்கழி மாத கோலத்தில் ,என் அக்காவின் கோலத்தை மிஞ்சியது வேறு யாருமே இல்லை , இதற்க்கு முக்கிய காரணம் என் அக்காவுக்கு ஓவியம் வரைய தெரியும் என்பதே!உண்மையில் விடியற்காலையில் மற்றவர்கள் எங்கள் வீட்டை தாண்டி செல்லும்பொழுது கோலத்தை பார்த்துக்கொண்டு புகழ்ந்துவிட்டு செல்வார்கள் !!

என் பணியில் மிகவும் முக்கியமானது , ஒற்றன் பணியே , ஒவ்வொரு வீடாக விடியற்காலையில் பார்த்துவிட்டு வந்து , என் அக்காவிடம் உளவு சொல்லுவேன் ,இத்த கோலம் இப்படி ,அந்த கோலம் அப்படி என்று , ஆனால் , கோலம்போட தாயார் ஆவதற்கு ,முந்தய இரவுளே ,அந்த கோலத்திற்கு ஏற்ப கலர் கோலமாவை வைத்துகொள்ள வேண்டும். என் அக்கா select -செய்யும் கோலங்கள் அனைத்தும் நிறைய கலர் உள்ளதாகவே இருக்கும்.

விடியற்காலையில் கோயிலில் சாமி பாடல்களை போட்டவுடனே , சீக்கிரமாக எழுந்து வீட்டு வாசலில் ,துடைபத்தால் நன்றாக கூட்டி பெருக்க வேண்டும் , பின்பு மாட்டு சாணம் கலந்த தண்ணிரை நன்றாக அதன்மேல் தெளித்து ,பின்பும் ஒருமுறை கூட்ட வேண்டும் ,இபொழுது நன்றாக தரை கோலம்போட எதுவாக இருக்கும்!

என் அக்க முதலில் , மெல்லில்ய கோடாக கோலத்தை போட்டு கொண்டு ,அந்த ,அந்த ,இடத்தில் கலர் கோலமாவை போடுவோம் ,நானும் சற்று நேரம்விட்டு எழுந்துவந்து கோலத்தில் கலந்து கொள்வேன் , என் அப்பா ஒரு பீடியை பற்றவைத்து கொண்டு ,வீட்டு திண்ணையில் அமர்ந்து எங்களை பார்த்து கொண்டு ஏதாவது எங்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பார் .என் அப்பாவும் ஆர்வமாக கோலத்தை பார்பார் ,ஒருவேளை பெண் குழந்தை பிடிக்கும் என்பதால் இருக்குமோ !!

கோலம் முடியும் தருவாயில் விடியற்காலை மெல்லிதாக கரைந்து கொண்டே இருக்கும்,அந்த நேரங்கள்  கோழிகள்  கூவும் ஓசைகள் கேட்க்கும் , பறைவைகள் மெல்லிய சத்தங்கள் எழுப்பி கொண்டு ஒரு திசையில்லிருந்து ,மறு திசைக்கு பறந்து கொண்டிருக்கும், அவர் ,அவர் ,வீட்டு வாசல்களில் பேச்சு குரல்கள் கேட்டு கொண்டிருக்கும் , தெருக்களில் நடக்க ஆரம்பிப்பார்கள் , ஆடு , மாடுகளை கூட்டி கொண்டு வயல்வெளிக்கு செல்வார்கள் .

இந்த கோலத்தில் ,என் உருப்படியான பணி , மாட்டு சாணத்தை கையில் எடுத்து அதில் அழகாக மூன்று சிறு பிள்ளையார் செய்து அதை கோலத்தின் நடுவில் வைப்பேன் ,பின்பு அதில் சிறு குங்குமம் வைத்துவிட்டு ,அறுகம் புல் எடுத்து அதன் நடுவினில் வைப்பேன் ,எங்கள் வீட்டு கொள்ளையில் பரங்கிக்காய் கொடியினில் தேடி , பரங்கி பூவை எடுத்து பிள்ளையார் நடுவினில் வைத்துவிட்டு ,

அந்த மார்கழி விடியற்காலையில் முழுவதும் முடிந்த எங்கள் வீட்டு கோலத்தை பார்க்கும்பொழுது கிடைக்கும் ஒரு ஆனந்த சுகம் !! அப்படியே தெரு முழுவதும் ஒரு ஓட்டம் ஓடிபோய் ,எல்லோருடைய கோலத்தைவிட நம்ம வீட்டு கோலம்தான் அழகு , இதை தோற்கடிக்க எங்கும் கோலம் இல்லை என்ற கர்வத்தில் பரவசமாய் மார்கழி பனியில் என் பால்யத்தின் பாத சுவடுகள் பால் பொங்கும் மகிழ்ச்சியாய் வீட்டினுள் செல்லும் .

.........................அன்புடன் அருள்




Monday, December 16, 2013

நானும் டுவிட்டரும்!!


நான் ஏன் டுவிட்ட வந்தேன் ஒரு சிறு அறிமுகம் ..

எனக்கு மூஞ்சி புக்கே அனுபவம் இல்லமாதான் இருந்தது ..ஆனா  எல்லோரும் முஞ்சி புக்கை பேசி பேசி ..எனக்கும் அதுல போகணுமுன்னு ஆர்வம் ..ஒருநாளு account open பன்னி சேர்ந்தேன் ..எனக்கு அதுல அவ்வளவு interest இருந்தது இல்ல ..அப்ப , அப்ப போயி பார்த்துட்டு வரத்தோட சரி...

திடிருன்னு ஒரு நாலு சும்மா அதுக்கு அழகான photos அன்னுபலாமுனு முடிவு பண்ணி வெறி  பிடிச்ச மாதிரி photos அனுபிகிட்டே இருந்தேன் ..ஒரு நாலு என்னோட ஜூனியர் பையன் என்கிட்ட...அண்ணே ஒரே ரோதனைய போச்சி ..எப்ப open பண்ணுனாலும் உங்க id லேருந்து பத்து பதினைந்து photos னு முஞ்சிய சுருக்கிட்டு சொன்னான் ..அப்படியே ஜெர்க் ஆயிட்டேன் ! மத்தவங்களா இருந்தா மரியாதை இல்லாம திட்டி இருப்பான் போல நினசிகிட்டு!! ..ஒன்னும் வெளிக்காடிகாமல்  மனசுக்குள்ளயே முழுங்கி கிட்டேன்.

ஏன் எனக்கு அவ்வளவா பிடிக்லைன்னு தெரியல ...ஆனா ! எப்ப பார்த்தாலும் ..நீ உண்மையில் சிறந்த குடிமகனா Like போடாமல் போகாதே ..இல்லாட்டி இந்த வறுமையை பாருங்கள் உள்ளம் துடிக்குதே Like or comment ..

இந்த குழபங்கலுக்கு இடையே ...ஏதாவது news படிக்கும்பொழுது  ..Twitter -ல மோடி அத சொன்னார் ..ஒபமா இதை சொன்னார் ..பின்பு நம்முடைய ஆனந்த விகடன் வலை பாயுதே வரும் ஜோக்ஸ் ..Twitter அப்படினா என்னா ..என்கின்ற பிம்மத்தை ஏற்படுத்தி விட்டது ..ஒரு நாளு account open பண்ணி  ..உள்ள நுழ்ஞ்சாச்சி ...
உள்ள போனா யாருமே இல்ல ..நான் மட்டும் தனியா இருக்கேன் ..அப்ப எனக்கு தெரிஞ்சது politician அல்லது சினிமா actors , directors அவங்க account ல படிச்சிட்டு வந்து வெளில சினிமா கதை பேசுறது ..

அப்புறம் ட்விட்டர் பிரபளங்கனு ஒரு குரூப் இருக்கு ..அவங்க அக்கௌன்ட் போயிட்டு படிக்கிறது ..இல்லாட்டி ..வானத்துல நிலா ..பூமில கடலுனு எழுதிட்டு ஓடிடவேண்டியது ..அப்படி வெளங்கா வெட்டியா ட்விட்டர் இருக்ககுளதான் ( இப்பவும் அப்படிதான் )..  எப்ப டுவிட்டர் வந்தாலும் என்னோட TL-ல நான் follow பண்ற நாலு பேரோட மென்சன் வந்திருக்கும் அத வெறிக்க பாக்குறது ..அப்பலாம் hollywood படத்துல வரமாதிரி....ஏதோ மீன்
market -ல தமிழ் பேசுரவங்கலோட எண்ணற்ற  குரல் ... Back Ground -ல கேக்குற மாதிரியே இருக்கும் ..எதோ ஒரு உலகம் உள்ள இருக்குனு தெரிஞ்சிது ..
Reply .பண்ண அப்பத்தான் ஆரம்பிச்சேன் ..இப்பதான் TL , மென்சன் ,RT ,டீஎம் தெரிஞ்சிகிட்டேன் ..

தெரியாத friends பேசுவாங்க ..நாமலும் பேசுவோம் ..அவங்க அவங்க மனசுல உள்ள கவிதை , அரசியல் , சினிமா ,சண்டை ,etc ...எல்லாம் இருக்கும் ..நம்ப RT பண்ணுவோம் ..நமது பிடிச்சிருந்தா அவங்க RT பண்ணுவாங்க !

எனக்கு புரிஞ்ச வரைக்கும் இந்த Twitter நல்ல சமுக வலைத்தளம்  தான் !!..நல்லா use பண்ணிக்கலாம்!!! , ஆனா யாரும் அத பண்றது இல்ல ..நடிகர் , நடிகை சண்டை  ( நானும்தான் ), 90% வெட்டி பேச்சுகள் ..யாரு அறிவாளினு காட்டிகறத்துகாக மாஞ்சி , மாஞ்சி பேசிபாங்க!  இதுல இந்த பிரபலங்கள் List புதியவங்களுக்கு Reply பண்னகுட யோசிக்கும் ..கொடுமை !!

என் வலை தளத்தை open செய்து ..இங்க பாறா !! தொற என்னமோ சொல்ல வருதுனு ..படிப்பவர்கள் , குறிப்பாக இந்த Twitter பயன்படுத்துபவர்கள் .இதில் நிறைய நண்பர்களை followers வைத்திருப்பவர்கள் ...நாம் அனைவரும் ஒன்று செய்ய முனையலாம் ..

முழு பொழுதை வெட்டியாக  பேசாமல் விண்வெளி , பகத்தறிவு , தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் செய்ய வேண்டியது , விட்டிலியே அடைப்பட்டிருக்கும் குடும்ப பெண்கள் எவ்வாறு சமுக வலை தளங்களை பயன்படுத்துவது ..இப்படி சிலவற்றை எடுத்து விவாதங்கள் செய்யலாம் ஓவ்வோன்றும் முடிவில்லா கருத்துகளை கொண்டது ..நான் இப்படி மதங்களை பற்றிய ஆங்கில விவாதங்களை படித்திருகின்றேன் ..

நிச்சயமாக நாம் இதை தொடங்கி வைத்தால் ..இன்னும் 30, 50 ஆண்டுகள் கழித்து வருங்கால இளைஞர்கள் சமுக வலைத்தளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வழிவகை அமைத்து தரலாம்.

Twitter - என்கின்ற கடலில் கால்களை மட்டும் நனைத்துள்ள ஒரு தத்துகுட்டியின் அனுபவத்தின் முதல் அலை !!

என்றும் நட்புடன் ...அருள் !!



Tuesday, December 3, 2013

மாமாவின் பிரிவு

5 வருடங்களாக எனக்கு  மாமா -வை தெரியும் பிழைப்புக்காக வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன் ..நன்றாக  நினைவு இருகின்றது !தர்மபுரியில் இருந்து நண்பர் ஒருவர்  இங்கு வேலைக்கு வருவதாக  நண்பன் சொன்னான்.

நான் என் அறையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு  கொண்டு இருந்தேன்.அப்போழுது என் அறையில் வாசலில் தொங்கி கொண்டிருந்த Curtain -னை ஒரு மெல்லிய உருவம் சிறிதாக நகர்த்தி நைசாக  எட்டி பார்த்தது, அப்போழுது நாங்கள் எதோ பூனை வந்துவிட்டதோ என்று நினைத்தோம் ஆனால் அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு ஒவ்வொருவரையும் பார்த்து வணக்கம் வைத்து கொண்டே தன்னை அறிமுகம் படுத்தி கொண்டது .நானும் என்னை கொடுமையே என்று  அறிமுக படுத்தி கொண்டேன் ( வேறு என்ன செய்ய )!!

தான் வேலை செய்யும் அலுவலகித்திலேயே  தங்கி கொண்டு ..என்றாவது வெள்ளிகிழமை ஒருநாள் பூனை மாதிரி வந்து ..எங்கள் கட்டிலில் அவருடைய seat -டை  அதில் பட்டும் படாமலும் வைத்து அமர்வார் ,,பின்பு மெல்லிய குரலில் பேசுவார் .ஆனால் எப்பவும் மறக்காமல் என்ன CD -இருகின்றது என்று கேட்டு வாங்கி செல்வார்,

உண்மையில் அவர் தர்மபுரி இல்லை..அவர் எப்போழுதும் தமிழ் பேச ஆரம்பித்தால் தமிழர்களாகிய எங்களுக்கு அந்த தமிழ் புரிந்ததே இல்லை. தமிழ்நாட்டில் வேற்று தமிழ் பேசுகிறவர்களும் இருப்பார்கள்போல என்று நினைத்துகொன்டேன்.

பின்புதான் தெறிந்தது கிருஷ்ணதேவராயர் ஆண்ட கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்றும்.நம் தமிழ்நாட்டின் முக்கிய பகுதியிலிருந்து வந்து புதியவகை தமிழ் உரையாடி கொன்டிருக்கிறார் என்றும் புரிந்தது!

இப்போழுது நன்றாக பேசி கொன்டுயிருக்கிறாறே என்று நாம் நம்பும்போழுது அவரைகாவை சவரக்காய் என்பார், பூசனிக்காயயை பனங்காய் என்று வாய்க்கு வந்ததை சொல்லி..நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் எங்களையே குருகுருயேன்று பார்ப்பார்..பின்பு என்ன நினைப்பாரோ அவராகவே ஹா..ஹா..ஹா-னு சிரித்துவிட்டு.எங்கள் ஊரில் இப்படிதான் பேசுவார்கள் என்று சொல்வார். பலநாட்கள் மாரடைப்பு வரும்மளவுக்கு கேட்டு கேட்டு பழகி விட்டதால் அனைவரும் அமைதியாக சென்று விடுவோம்.

மற்றவரிடம் பழகும்போழுது இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல நடந்து கொள்வார் இப்படியாக அவர் நடந்து கொண்டாலும் எனக்கு எப்பவும் அவரின் மேல் ஒரு சந்தேக பார்வை இருக்கத்தான் செய்தது ..நான் நினைத்து ஒன்றும் தப்பு இல்லை என்பது போல் ..மெல்ல மெல்ல அவரின் உண்மை சுயரூபம் வெளியே வந்தது.
எப்பவும் Area  என் கையில் இருக்கவேண்டும் என்கின்ற  நினைப்பில் மிதந்து கொன்டுயிருந்த எனக்கு  ..மெல்ல பயம் பரவ ஆரம்பித்தது, தலமை பதவிக்கு ஆபத்து வந்துவிட்டதை உனர்ந்தேன் !

நாங்கள் எல்லாம் ரௌடியாக Form - ஆகிவிட்ட நிலையில் ..ஒரு பூனை தலைமை பதவியை நோக்கி மெல்ல நகர்ந்தது .முதல் முயற்சியாக அலுவலக Room -லிருந்து எங்களுடன் வந்து தங்கி கொண்டு ..ஒன்னுமே தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா !! என்பது போல ..சில விஷயங்களை கற்று கொண்டிருந்தது ( கெடுத்தது நானும்தான் )..இப்படியாக சென்று கொண்டிருந்த நாட்களின் இடையில் ..எனக்கு மாமா அவரும் ..அவருக்கு மாமா நானும்மாக மாரிவிட்டிருந்தோம் !!

உண்மையில் என் வாழ்கையில் , நான் பணிபுரிந்த நாட்டில் .ஒரு தோழமை  நான் சோர்வடையாமல் பணி புரிய உதவி கொண்டிருந்தது ..இங்கு என் சந்தோஷ தருணங்கள் அனைத்தும் மாமாவுடனே கழிந்தது ..அனைத்து தருணங்களிலும் எங்களுக்குள் நல்ல புரிதலும் இருந்தது !

திரும்பவும் நம் கதைக்கு வருவோம் ..'பாட்ஷா' படத்தில் மாணிக்கம் திடிரென்று பாட்ஷாவாக மாறுவதை போல ..இந்த வீட்டு பூனையாக நடித்துகொண்டு இருந்த மாமன் ..வேஷத்தை கலைத்து ஒரிஜினல் காட்டு பூனையாக மாறியது ( நான் அன்றே நினைத்ததுதான் )..நான்
அரசனாக ஆண்டுவந்த Area -வில் ..அனைவரையும் சொர்கத்தில் ஆழ்த்தி
தலைமை அரியணையில் அமைதிப்படை சத்தியராஜ் போல அமர்ந்துகொண்டது இந்த திருட்டு பூனை மாமா !!

எங்கள் Room -ல் கேரன் போர்ட் விளையாட்டை  சர்வதேச விளையாட்டாக மாற்றிய  மாமா ...இரவு முழுவதும் தூங்கவிடாமல் , உனக்கு தில் இருந்தா வா ? அது இருந்தா வா ? இது இருந்தா வா ? என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார் .

நான் மனம் திறந்து பேசகூடிய நல்ல நண்பனாக ...என் மாமாவாக மாறி என் நட்பின் உச்சத்தில் அழைக்க பட்டதே மாமா!! ..நீங்கள் எதுவும்  தவறாக நினைக்க வேண்டாம்? ..வெளிநாட்டின் சுமை தெரியாமல் ..வார வாரம் அழைத்து ..நினைவுகளை பகிர்ந்து கொண்டு ..என்னுடன் கட்டி புரண்டு படுத்திருந்து ...ஒரே போர்வைக்குள் சண்டை போட்டு , கதை பேசி ..கட்டி பிடித்து உறங்கிய நாட்கள் பாலைவனத்தின் கவிதை ! !

இப்படி ஒன்னும் ,மண்ணுமாக இருந்துவிட்டு ..அனைவரையும் சந்தோஷ பானங்களில் மிதக்கவிட்டு , சந்தோஷ பூக்களை வார்த்தைகளாய் வாரி இறைத்து ..எண்ணின் அனைத்திலும் ஒருவனாய் ..மாறிய பொழிதில் வாழ்கையின் சிறையில் அடைபட சென்றுவிட்டாயே என் மாமா !!

போகும் நாள்வரை மேகமூட்டமாய் இருந்துவிட்டு ..உங்களை விட்டு எங்கு செல்வேன் என்று சொல்லி ,சொல்லியே ..Room -ல் இருந்த உன் Things-சை எல்லாம் வாரி சூரிட்டு கொண்டு சென்று விட்டாயே ! சங்கத்தின் நிலைமைதான்  என்ன ..எங்கள் நிலைமைதான் என்ன.. உன் அன்பு மாமனின் நிலைமைதான் என்ன !!

மாமா -வின் பிரிவு என்னை கடுமையாக வாட்டினாலும் ..மாமா மகிழிச்சி பொங்க திருமணம் செய்து..மாமாவை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் !!...

என்றும் அன்புடன் மாமா அருள் .............